நாளைக்கு உயிரோட இருப்பானா?அம்மானு கூப்பிட்டதே இல்ல - மகனால் கலங்கிய மாளவிகா!
மகன் குறித்து நடிகை மாளவிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.
மாளவிகா அவினாஷ்
அண்ணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா அவினாஷ். தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், என் மகன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான், முக தோற்றத்திலும் எந்த விதமான வித்தியாசமும் தெரியாது. ஆனால், இவனால் பேச முடியவில்லை என்று பல மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து இருக்கிறேன்.
மகன் குறித்து உருக்கம்
ஆனால் அதற்கான தீர்வு கிடைக்கவே இல்லை. ஸ்பெஷல் சைல்ட் என்று தெரிந்ததும் இருவரும் மொத்தமாகவே உடைந்து விட்டோம். ஒரு குழந்தையை பெற்ற அம்மாவின் அதிகபட்ச ஆசையே குழந்தை தன்னை அம்மா என்று அழைக்க வேண்டும் என்று தான்.
ஆனால் என் மகன் என்னை அம்மா என்று கூப்பிட்டதே இல்லை, அவனால் கூப்பிட முடியாது. என்ன பிரச்சனை என்று தெரியாததால் நாளைக்கு உயிரோடு இருப்பானா? இருக்க மாட்டானா என்று நினைத்தே 15 ஆண்டுகாலம் நாங்கள் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம்.
போகாத கோவில் இல்ல, கும்பிடாத சாமி இல்லை, யார் யார் என்ன என்ன செய்ய சொல்லுகிறார்களே அதை எல்லாத்தையும் செய்து விட்டேன் என உருக்கமாக பேசியுள்ளார்.