தனுஷுடன் நெருக்கமான அமலாபால்...அபார்ட்மெண்ட் தேடி சென்று மிரட்டிய ரஜினி..?

Dhanush Rajinikanth Amala Paul Tamil Cinema Aishwarya Rajinikanth
By Karthick Sep 22, 2023 02:30 PM GMT
Report

காதலித்து திருமண செய்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதி கருத்து வேறுபாடுகளின் காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தனுஷ்

தமிழ் திரையுலகில் அறிமுகமான இரண்டாவது படத்திலேயே அனைவரது கவனத்தையும் திரும்பியவர் தனுஷ். ஆரம்பக்கட்டத்தில் உருவக்கேலிக்கு ஆளாகினாலும், பின்னர் அநேக ரசிகர்களை தனக்கென உருவாக்கி தற்போது தமிழ் மட்டுமின்றி இந்திய திரை உலகிலேயே முக்கிய நட்சத்திரமாக திகழ்கிறார் தனுஷ்.

rajini-threatened-amala-for-getting-closer-dhanush

இவரது திருமணம் 18 ஆண்டுகள் கழித்து முறிந்தாலும், ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் காதல் கதை பலரும் அறிந்திடாத ஒன்றே. கடந்த 2004-ஆம் ஆண்டு தன்னுடைய 23 வயதில் தனுஷ் ஐஸ்வர்யாவை திருமண செய்து கொண்டார்.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இந்த நடிகையா? உண்மை உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் இந்த நடிகையா? உண்மை உடைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

மிரட்டினாரா ரஜினி

இவர்கள் இருவரின் பிரிவிற்கு நடிகர் தனுஷ் மற்றும் அமலா பால் மத்தியில் ஏற்பட்ட நெருக்கமே காரணம் என அப்போது செய்திகள் பல வெளிவந்தன. இந்நிலையில், இது குறித்து சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில், திடுக்கிடும் தகவலை தெரிவித்திருக்கிறார்.

rajini-threatened-amala-for-getting-closer-dhanush

அந்த பேட்டியில், வேலை இல்லா பட்டதாரி படத்தின் போது, அமலா பாலுடன் தனுஷ்ஷுக்கு நெருக்கம் ஏற்பட, இதையறிந்த ரஜினிகாந்த் டென்ஷனாகி, அமலா பால் தங்கியிருந்த வீட்டிற்கு நேராக சென்று மகளுக்காகப் அமலா பாலை எச்சரித்தார் என்று கூறினார்.

rajini-threatened-amala-for-getting-closer-dhanush

இது அப்போது ஊடகத்தில் செய்தியாக கூட வந்தது என குறிப்பிட்ட செய்யாறு பாலு, அதன்பிறகு, முற்றிலும் அமலா பால், தனுஷிடம் இருந்து விலகி தற்போது ஆன்மிகம் பக்கம் சென்றுவிட்டார் என கூறினார்.