நா இருக்கேன் யார் வரா'னு பார்ப்போம் - அன்னைக்கு விஜயகாந்த் செய்தது..! கண்கலங்கியபடி நினைவுகளை பகிர்ந்த ரஜினி..!!

Rajinikanth Vijayakanth
By Karthick Dec 29, 2023 05:41 AM GMT
Report

சற்று முன்பு நடிகர் ரஜினிகாந்த் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ரஜினி அஞ்சலி

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் மக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பெருந்திரளான கூட்டம் அவருக்கு தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றார்.

rajini-pays-last-tribute-to-vijayakanth-and-shares

இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த், சென்னை வந்து நேரில் தனது அஞ்சலியை செலுத்தினார். அருகில் இருந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்த்தின் மகன்கள் விஜயப்ரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதலை தெரிவித்தார்.

அன்னைக்கு விஜி பண்ணது..

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசும் போது, மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது, நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த் என்ற ரஜினிகாந்த், அவரின் அன்பிற்கு அனைவரும் அடிமையாகிவிடுவார்கள் என்றார்.

அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பு வீச்சா..? தாக்கப்பட்டாரா தளபதி - வைரலாகும் வீடியோ.!!

அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பு வீச்சா..? தாக்கப்பட்டாரா தளபதி - வைரலாகும் வீடியோ.!!

நண்பர்கள், அரசியல்வாதிகள், ஊடகத்தினரிடம் விஜயகாந்த் கோபப்பட்டாலும், அவரின் கோவத்தின் பின்பு ஒரு காரணம் இருக்கும் என கூறிய அவர், நா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, தானே தனியாளாக நின்று கட்டுக்கடங்காத கூட்டத்தை விலக்கிவிட்ட விஜயகாந்த், என்னுடைய ரூமின் அருகில் இருந்து, நா இருக்கேன் யாரு வருவாங்க'னு பார்ப்போம் என்றார்.

rajini-pays-last-tribute-to-vijayakanth-and-shares

அப்படிப்பட்ட அவரை இவ்வாறு பார்ப்பது கஷ்டமாக உள்ளது என்ற ரஜினிகாந்த், கேப்டன் என்ற பெயர் அவருக்கு பொருத்தமானது என்று கூறி, வாழ்ந்தவர் கோடி - மறைந்தவர் கோடி மக்கள் மனதில் யார்..? விஜயகாந்த் போன்றோர் என்று தெரிவித்து சென்றார்.