ரஜினி கமல் இணைந்து நடிப்பதாக உறுதி - நடிகர் சங்க கூட்டத்தில் வெளியான தகவல்
நடிகர் சங்கத்திற்கு விஜய் ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் காலை 10 மணியளவில் தொடங்கியது. முன்னதாக செயற்குழு கூட்டம் நிறைவடைந்தநிலையில், தற்போது பொதுக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் மன்சூர் அலிகான் உட்பட ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
பதவிக்காலம்
இந்த கூட்டத்தில், சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்க நிதி ஒதுக்கீட்டுக்கு நன்றி தெரிவித்தும், சங்க கட்டத்திற்குத் தொகை பெற அமைச்சர் உதயநிதி ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்க கட்டிட பணி பாதிக்கும் என்பதால் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரஜினி கமல்
மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணியில் ஏற்பட்ட கடனை அடைக்க நடத்தப்படும் கலை நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிப்பதாக உறுதி அளித்துள்ளதாக நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கடனாக அல்லாமல் நிதியாக ஒரு கோடி அளித்துள்ளார். நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிப்பதற்கு நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.