பாலியல் குற்றச்சாட்டுகளை மீடியாவில் பேச வேண்டாம் - நடிகைகளுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

Tamil Cinema Tamil Actors Tamil Actress Media
By Karthikraja Sep 04, 2024 04:30 PM GMT
Karthikraja

Karthikraja

in சினிமா
Report

நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

ஹேமா ஆணைய அறிக்கை

மலையாள சினிமா துறையில் நடைபெற்று வரும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஹேமா ஆணைய அறிக்கை வெளியாகி மலையாள திரை உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 

hema committee report

இதனையடுத்து பல்வேறு நடிகர், இயக்குநர், தயாரிப்பளார் மீது நடிகைகள் வெளிப்படையாக பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். தெலுங்கு சினிமாவிலும் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டுமென நடிகை சமந்தா கருத்து தெரிவித்திருந்தார். 

வெளிநாட்டில் வைத்து பாலியல் தொல்லை - பிரேமம் புகழ் நிவின் பாலி மீது நடிகை குற்றச்சாட்டு

வெளிநாட்டில் வைத்து பாலியல் தொல்லை - பிரேமம் புகழ் நிவின் பாலி மீது நடிகை குற்றச்சாட்டு

தமிழ் சினிமா துறை

இந்நிலையில் தமிழ் சினிமா துறையிலும் பாலியல் தொல்லை உள்ளதாக குரல் எழுந்தது. இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் பேசி இருந்தார். 

இதனையடுத்து, 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட SIAA-GSICC கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

tamil nadigar sangam

இதில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி, கமிட்டி உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தீர்மானம்

இந்த கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், 1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

2. பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.

3. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புகார் அளிக்கும் வசதி

4. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது, தற்போது இ - மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

5. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

tamil nadigar sangam resolutions

6. யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

7. மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.