"சங்கி" கேட்ட வார்த்தையா..? ஐஸ்வர்யா சொன்னது இது தான் - ரஜினி விளக்கம்

Rajinikanth Aishwarya Rajinikanth
By Karthick Jan 29, 2024 07:20 AM GMT
Report

லால் சலாம் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கருத்து

அண்மையில் நடைபெற்ற லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும் போது, அப்பா(ரஜினிகாந்த்)'வை சங்கி'ன்னு சொல்லும்போது கோபம் வரும் என்று தெரிவித்தார்.

rajini-clarifies-statement-on-aishwarya-sanghi

மேலும், இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது என்றும் சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என்று ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து பல கருத்துக்கள் ஐஸ்வர்யாவின் பேச்சு குறித்து கூறப்பட்டு வருகின்றது.

"அப்பா சங்கி கிடையாது" - மேடையிலேயே சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

"அப்பா சங்கி கிடையாது" - மேடையிலேயே சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சங்கி கேட்ட வார்த்தையா..

சமூகவலைத்தளங்களிலும், இது குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த விஷயம் குறித்து இன்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

rajini-clarifies-statement-on-aishwarya-sanghi

சென்னை விமான நிலையத்தில், அவரிடம் இது குறித்து வினவப்பட்ட போது, ஐஸ்வர்யா சங்கி என்பது கேட்ட வார்த்தை என எங்கும் சொல்லவில்லை என கூறிய அவர், அப்பா ஒரு ஆன்மீகவாதி, அனைத்து மதங்களையும் விரும்புகிறவர் அவரை ஏன் இவ்வாறு கூறுகிறார்கள் என்று தான் பேசியதாக தெரிவித்தார்.