கடவுள் கிருஷ்ணரை கல்யாணம் செய்த பெண் - பரபரப்பு காரணம்!
கடவுள் கிருஷ்ணரை, பெண் ஒருவர் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமணம்
ராஜஸ்தான், நர்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா சிங்(30). இவர், அரசியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில் கடவுள் கிருஷ்ணரை திருமணம் செய்துள்ளார். இவரின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. இவருக்கு கிருஷ்ணர் உடனான பூஜாவின் திருமண நிகழ்வில் உடன்பாடு இல்லை.
எனவே, அந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், பூஜா சிங்கின் தாயார், அவருக்கு முழுவதுமாக துணை நின்று திருமணத்தை செய்துவைத்துள்ளார். கிருஷ்ணரின் சிலை முன் அனைத்து பூஜை, சடங்குகளை செய்து, 300 உறவினர்கள் மத்தியில் இந்து முறைப்படி திருமணத்தை மேற்கொண்டார்.
கடவுள் கிருஷ்ணருடன்..
இதுபோன்ற திருமணத்திற்கு குடும்பத்தினரை சம்மதிக்கவைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றும், ஆனால், விடாப்பிடியாக இருந்து, தனது தாயாரின் சம்மதத்தை பெற்றதாக பூஜா தெரிவித்துள்ளார். மேலும், "பல்வேறு காரணங்களுக்காக திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் சண்டைப்போட்டு பிரிவதை நான் பார்த்துள்ளேன்.
அதற்கு பின் அவர்களின் வாழ்க்கையே சீரழிந்துவிடும். இதில், பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவேதான், நான் கிருஷ்ணரை திருமணம் செய்ய முடிவெடுத்தேன்" என கூறியுள்ளார்.