‘’அந்த மனசுதான் சார் கடவுள் ‘’ - திருமணத்தில் மீதமான உணவை ஏழைகளுக்கு கொடுத்த பெண்

wedding food woman distribute
By Thahir Dec 06, 2021 07:42 AM GMT
Report

கொல்கத்தாவில் திருமண விருந்தில் மீதமான உணவை மணமகனின் சகோதரி உடனடியாக எடுத்துச் சென்று ரயில் நிலையம் அருகே நடைபாதையில் உள்ள ஏழைகளுக்கு வழங்கும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் திருமணம் என்பது திருவிழாவாக கொண்டாடப்படும் , தற்போது கொரோனா பரவல் காரணமாக திருமணங்களில் பிரம்மாணட செலவுகள் குறைக்கப்பட்டு எளிமையாக நடைபெறுகிறது.

குறிப்பாக திருமணங்களில் உணவு என்பது ஒரு மிக முக்கியமான பகுதியாகும், பெரும்பாலும், குடும்பங்கள் தங்கள் விருந்தினர்கள் பசியுடன் திரும்பி சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதிக உணவைக் சமைக்கிறார்கள்.

‘’அந்த மனசுதான் சார் கடவுள் ‘’ - திருமணத்தில் மீதமான உணவை ஏழைகளுக்கு கொடுத்த பெண் | Woman Distributes Leftover Food From Wedding

இதனால், ஏராளமான உணவுப் பொருட்கள் வீணாகின்றன. இந்த நிலையில், வங்காளத்தில் ஒரு ரயில்வே பிளாட்பாரத்தில் ஒரு பெண் தனது திருமணத்திற்கான நகைகள் மற்றும் பட்டுப்புடவை அணிந்து, ஏழைகளுக்கு எஞ்சிய திருமண உணவை வழங்கும் காட்சி விடியோவாக வைரலாகி வருகிறது.

பாப்பியா என்று  பெயர் கொண்ட அந்த பெண் தனது சகோதரனின் திருமணத்தில் மீதமுள்ள உணவை ஏழைகளுக்கு கொடுக்கிறார்.

கொல்கத்தா புறநகர் ரயில் நிலையமான ரனாகாட் சந்திப்பில் டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது .

பாரம்பரிய திருமண உடையை அணிந்து, காகிதத் தட்டுகளில் பருப்பு, ரொட்டி, மற்றும் சாதமும் உள்ளது, இதனை ரயில்வே நடை மேடையில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வழங்குகின்றார், பாப்பியவின் இந்த செயலுக்கு இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.