துடித்த மகன்; ஹாஸ்பிட்டல் லிப்டுக்குள் ஸ்கூட்டரில் பயணம் - தந்தை நெகிழ்ச்சி செயல்!

Rajasthan
By Sumathi Jun 18, 2023 05:14 AM GMT
Report

மருத்துவமனைக்குள் ஸ்கூட்டரில் நோயாளியை அழைத்து சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அடிபட்ட  மகன்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், காலில் அடிபட்ட மகனை மருத்துவமனைக்குள் இருசக்கர வாகனத்தில் தந்தை அழைத்து சென்றார். மேலும், லிஃப்டிலும் ஸ்கூட்டரிலேயே பயணித்துள்ளார்.

துடித்த மகன்; ஹாஸ்பிட்டல் லிப்டுக்குள் ஸ்கூட்டரில் பயணம் - தந்தை நெகிழ்ச்சி செயல்! | Rajasthan Man Scooter Inside Hospital Son Video

அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் பற்றாக்குறை இருப்பதால், அவசரம் கருதி ஸ்கூட்டரில் அழைத்து சென்றதாக தந்தை விளக்கமளித்துள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 அதிர்ச்சி வீடியோ

இதனை கண்ட நெட்டிசன்கள், நண்பன் திரைப்படத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜீவாவின் தந்தையை, நடிகர் விஜய் ஸ்கூட்டரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார். அதனை இந்தக் காட்சி மிஞ்சி விட்டதாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.