நிர்வாண கோலத்தில் படுத்திருந்த கொரோனா நோயாளிகள் : வீடியோ வெளியானதால் அதிர்ச்சி!
ஆண் கொரோனா நோயாளிகளும், பெண் கொரோனா நோயாளிகளும் மருத்துவமனைக்குள் நிர்வாணமாக படுத்திருந்த புகைப்படங்களுடன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை ஒடிசா மாநிலம், மயூர் பஞ்ச் நிர்வாகத்திலிருக்கும் கலிங்க மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை என்று தெரியவந்துள்ளது
வீடியோவை எடுத்த நபர் அந்த வீடியோவில் பேசுகையில், ‘என் தந்தைக்கு கொரோனா சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். இங்கு எந்த அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
நோயாளிகளுக்கு தேவையன உணவு இல்லை. மருத்துவர்களும், செவிலியர்களும் இந்த மருத்துவமனையில் கிடையாது. கழிவறைக்குள் நோயாளிகள் இறந்து கிடக்கின்றனர். ஆண், பெண் கொரோனா நோயாளிகள் தரையில் நிர்வாணமாக படுத்து கிடந்ததை கண்டு நான் அதிர்ந்து அடைந்துள்ளேன் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சர்ச்சையாகியுள்ளது.
தகவல் அறிந்ததும் மயூர் பஞ்ச் ஆட்சியர் வினீத் பரத்வாஜ், அந்த மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா நோயாளிகளின் அந்த நிர்வாண வீடியோவை அம்மருத்துவமனையில் நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். அந்த வீடியோ மற்றும் அதில் கூறப்பட்ட தகவல்கள் மிகவும் பொய்யானது என்று கூறியுள்ளனர்.