மதுபோதையில் மனைவியை பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற கணவன் – காவல்துறை அதிரடி நடவடிக்கை
ராஜஸ்தானில் மதுபோதையில் மனைவியை பைக்கில் கட்டி தரதரவென்ற இழுத்துச்சென்ற வீடியோ வைரலாகி பதைபதைக்க வைத்துள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் பிரேமராம். 32 வயதாகும் மதுபோதைக்கு அடிமையானவர்.பிரேமராம் மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியும் ,அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாரிடமும் பேச விடாமல் சித்திரவதை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில்,மதுபோதையில் இருந்த பிரேமராம் தனது மனைவியை தாக்கி, தனது பைக்கில் மனைவின் கைகளை கட்டி கல், மணல் நிறைந்த பாதையில் வேகமாக ஓட்டிச்செல்ல பின் புறத்தில் அவரது மனைவி தரையில் தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
கைது
இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேமராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.