சிறுவனுடன் குடித்தனம் நடத்திய கல்லூரி மாணவி : கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்கு , காரணம் என்ன?
பெற்றோருக்கு தெரியாமல் சிறுவனை வீட்டை விட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து தனி குடித்தனம் நடத்தி வந்த இளம்பெண் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜூனியர் மாணவனை மயக்கிய சீனியர் மாணவி
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி. காம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் அந்த மாணவர். 18 வயது நிரம்பாத அந்த மாணவர் கடந்த ஆறாம் தேதி அன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை . இதனால் பதறிப் போன கற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்
போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கு இடையில் மாணவரின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். தங்களது மகனை காணவில்லை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்,இதன்பின்னர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
போலீசாரின் தீவிர தேடலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேரிகை பாரதி நகர் பகுதியில் மாணவர் இருப்பது தெரிய வந்தது. மாணவருடன் இளம்பெண்ணும் இருப்பது தெரிய வந்தது .
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
போலீசார் இருவரிடம் நடத்திய விசாரணையில் அந்த இளம் பெண்ணுக்கு 21 வயது என்பதும் சூர்யாவுக்கு 18 வயது நிரம்ப வில்லை என்பதும் தெரிய வந்தது.
மேற்கொண்டு விசாரணை நடத்திய போது, கல்லூரியில் படித்த போது இருவரும் காதலித்து வந்ததாகவும் மாணவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வாழலாம் என்று அந்த இளம் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்ததாகவும் தெரிய வந்திருக்கிறது .
மூன்று மாத கர்ப்பம்
இதை அடுத்து மாணவனுக்கு 18 வயது நிறைவடையாத தால் போக்சோ சட்டத்தின் கீழ் மாந அந்த இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் பின்னர் அந்த இளம் பெண்ணுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்திருக்கிறது .
இதை கேட்டு பெற்றோரும் போலீசாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.