500 ரூபாயில் கல்யாணத்தை முடித்த ஐஏஎஸ் தம்பதி - வைரலாகும் புகைப்படம்!
500 ரூபாயில் திருமணம் செய்து கொண்ட ஐஏஎஸ் தம்பதியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐஏஎஸ் தம்பதி
ராஜஸ்தான், அல்வாரை சேர்ந்தவர் ஆஷிஷ் வசிஷ்ட். பஞ்சாப் ஜலாலாபாத்தை சேர்ந்தவர் சலோனி சிதானா. இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள். மத்திய பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்து, தங்களது குடும்பத்தினரை திருமணம் பதிவு செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள். தொடர்ந்து, மாலை மாற்றி கொண்டனர்.
500 ரூபாயில் திருமணம்
அடுத்தடுத்து திருமண சடங்குகள் நடந்த நிலையில், வெறும் ரூ.500 பதிவு கட்டணம் மட்டும் செலுத்தி எளிமையாக திருமணம் நடத்தி முடித்துவிட்டனர். மேலும், இந்த திருமணத்திற்காக 2 பேருமே, 2 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்துள்ளனர்.
3வது நாள் பணிக்கு திரும்பிவிட்டனர். ஆனால், இந்த திருமணம் கடந்த 2016ல் நடந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தெரியவரவே இணையத்தில் வைரலாகி வருகிறது.