ஆசையாய் கேட்ட கணவர்..3வது திருமணம் செய்து வைத்த 2 மனைவிகள் - ருசிகர சம்பவம்!

India Andhra Pradesh Viral Photos
By Swetha Jul 01, 2024 03:00 PM GMT
Report

 மனைவிகள் தங்களது கணவருக்கு 3வது திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

2 மனைவிகள்

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடப்பயலு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா என்ற நபர். இவருக்கு பர்வதம்மா என்ற பெண்ணுடன் முதலில் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

ஆசையாய் கேட்ட கணவர்..3வது திருமணம் செய்து வைத்த 2 மனைவிகள் - ருசிகர சம்பவம்! | 2 Wives Arranges 3 Marriage For Thier Husband

இதனால் முதல் மனைவியின் சம்மதத்துடன் அப்பலம்மா என்ற மற்றொரு பெண்ணை பாண்டண்ணா 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2007ம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், பாண்டண்ணாவுக்கு 2வது குழந்தை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இரண்டாவது மனைவி தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் விடாமல் பாண்டான்னா 2-வது குழந்தை வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக மனைவிகள் இருவரும் தாங்களாகவே முன்வந்து அவருக்கு 3-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

லவ் ஜிகாத் திருமணம் செய்த கணவர்?? கொந்தளித்த நடிகை பிரியாமணி

லவ் ஜிகாத் திருமணம் செய்த கணவர்?? கொந்தளித்த நடிகை பிரியாமணி

3வது திருமணம் 

இதையடுத்து, அதே பகுதியை சேர்ந்த லாவ்யா என்ற இளம் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தனர். பிறகு பத்திரிகை அடித்து உற்றார் உறவினர்கள் மற்றும் ஊர் முழுவதும் கொடுத்தனர்.

ஆசையாய் கேட்ட கணவர்..3வது திருமணம் செய்து வைத்த 2 மனைவிகள் - ருசிகர சம்பவம்! | 2 Wives Arranges 3 Marriage For Thier Husband

தங்களது படத்துடன் கணவர் மற்றும் 3-வது மனைவி படத்தை வைத்து வரவேற்பு டிஜிட்டல் பேனர்களையும் அவர்கள் வைத்தனர். இந்த சூழலில், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் கணவருக்கு 3-வது திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து வைத்து அசத்தினர். கணவரின் சந்தோஷத்திற்காக 2 மனைவிகள் சேர்ந்து 3-வது திருமணம் செய்து வைத்த வாழ்த்து பேனர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.