லவ் ஜிகாத் திருமணம் செய்த கணவர்?? கொந்தளித்த நடிகை பிரியாமணி
2017 ஆம் ஆண்டு முஸ்தபாவை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி.
பிரியாமணி
பருத்திவீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார் பிரியாமணி. இப்படம் பிரியாமணிக்கு பெரும் புகழையும், தேசிய விருதையும் வென்று கொடுத்தது.
பருத்திவீரன் படத்திற்கு பிறகு ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அறிமுகமானவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய போதிலும், கமர்சியல் சினிமாவால் கமர்சியல் நாயகியாக மாறினார் பிரியாமணி.
மும்முரமாக நடித்து கொண்டிருந்த போதே இவர் 2017-ஆம் ஆண்டு முஸ்தபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் காதல் திருமணம் ஆகும். இஸ்லாமியரான முஸ்தபா தீவிரமாக காதலித்து வீட்டாரின் சம்மதத்துடன் மணந்து கொண்டார் பிரியாமணி.
லவ் ஜிகாத்
அவ்வப்போது இவர்களது திருமணம் குறித்து பல எதிர்மறையான கருத்துக்கள் வெளிவரும். அதற்கு முக்கிய காரணம் பிரியாமணி ஹிந்து, கணவர் முஸ்தபா இஸ்லாமியர் என்பதே. இருப்பினும் இவர்கள் திருமண பந்தம் அழகாகவே சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில், இவர்களது திருமணம் லவ் ஜிகாத் என்ற கருத்துக்கள் பரவிய நிலையில், அது குறித்து பிரியாமணி விளக்கமளித்துள்ளார். அவர் இது குறித்தும் பேசியது வருமாறு, லவ் ஜிகாத் கருத்திற்கு மறுப்பு தெரிவித்து பிரியாமணி, நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
இருப்பினும், திருமணத்தை பலர் லவ் ஜிகாத் என்கிறார்கள். ஒருவரின் மத நம்பிக்கையை பயங்கரவாத - தவறான சித்தாந்தத்துடன் ஒப்பிடுவது தவறு.