துணை முதல்வர் மகனுக்கு அபராதம் - அதிரடி காட்டிய போக்குவரத்து துறை
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் துணை முதல்வர் மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் துணை முதல்வர்
ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரேம் சந்த் பைரவா ராஜஸ்தான் மாநில துணை முதல்வராக உள்ளார்.
துணை முதல்வர் பிரேம் சந்த் பைரவாவின் மகன் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் மாநில போக்குவரத்து காவல்துறை ரூ7,000 அபராதம் விதித்துள்ளது.
வாகன பயணம்
கடந்த சில நாட்களுக்கு முன் பிரேம் சந்த் பைரவாவின் மகன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர் புஷ்பாந்தர் பரத்வாஜ் மகன் ஜீப்பின் முன் பயணிகள் இருக்கையிலும் மேலும் இருவர் பின்பக்கத்திலும் ஜெய்ப்பூரின் ஆம்பர் சாலையில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டி சென்றனர். சைரன் வைத்த மகாராஷ்டிரா மாநில அரசு வாகனம் இவர்களின் வாகனத்திற்கு பின்னல் சென்றது.
Son Dy CM of Rajasthan BJP government
— Sumit Sharma (@daily_elections) September 26, 2024
Please like and subscribe
And Remeber to pay challan if you don’t wear seat belts
pic.twitter.com/UUpRJFUI65
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து ஜீப்பில் பெரிய அளவிலான டயரை பொருத்தியது, சீட் பெல்ட் அணியாதது மற்றும் செல்போனில் பேசியபடியே பயணம் செய்தது ஆகிய காரணங்களுக்காக ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரேம் சந்த் பைரவா
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள துணை முதல்வர் பிரேம் சந்த் பைரவா, "என்னைப் போன்ற ஒருவரை ராஜஸ்தானின் துணை முதல்வராக்கியதற்காக மாண்புமிகு பிரதமருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதற்குப் பிறகு, செல்வந்தர்கள் எனது மகனைத் தங்களுடைய காரில் உட்கார வைத்து, சொகுசு கார்களைப் பார்க்க அவருக்கு வாய்ப்பு அளித்தால், நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
என்னுடைய மகன் பள்ளி உயர் கல்வி தான் பயின்று வருகிறார், அவருடன் பள்ளி மாணவர்கள் தான் இருக்கிறார்கள். மகனுக்கு இன்னும் 18 வயது கூட ஆகவில்லை. மகனின் பாதுகாப்புக்காகவே காவல்துறை வாகனம் பின்னல் சென்றது. இனிமேல் இது போன்று செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளேன்" என தெரிவித்தார்.