மத்திய அமைச்சருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ் - என்ன காரணம் தெரியுமா?
மத்திய அமைச்சருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
சிராக் பஸ்வான்
முன்னாள் மத்திய அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான சிராக் பஸ்வான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பீகார் மாநில ஹாஜீபூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சராக சிராக் பஸ்வான் நியமிக்கப்பட்டார்.
அபராதம்
சமீபத்தில் பீகாரில் உள்ள ஹாஜிபூரில் இருந்து சம்பாரண் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிராக் பஸ்வான் பயணம் செய்து கொண்டிருந்த போது அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வேகமாக செல்லும் கார்களை கண்டறிய பீகாரில் உள்ள சுங்கச்சாவடிகளில் புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த கருவி சிராக் பஸ்வான் கார் வேகமாக சென்றதால் அபராதம் செலுத்தும்படி அவருக்கு இ சலான் வழங்கியுள்ளது.
பீகார் போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை, மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதற்காக மாநிலத்தில் உள்ள 13 சுங்கச்சாவடிகளில் நிறுவப்பட்ட மின் கண்டறிதல் அமைப்பு மூலம் ஒரு வாரத்தில் ₹ 9.49 கோடி மதிப்புள்ள 16,700 இ-சலான்களை வழங்கியுள்ளனர். இந்த அமைப்பு வாகனங்களைச் சரிபார்த்து, தேவையான ஆவணங்கள் இல்லாத நிலையில் தானாகவே இ சலானையும் வழங்குகிறது.