சட்டசபை தேர்தல் துவக்கம்.. புதிய சாதனை படைக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்!

Narendra Modi Rajasthan Election
By Vinothini Nov 25, 2023 06:37 AM GMT
Report

தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டசபை தேர்தல்

ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அதனால் 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் காங்கிரசை சேர்ந்த சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா என கட்சியின் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

pm narendra modi

அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், பா.ஜ.க. சார்பில், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.பிரதமர் மோடியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தெய்வ குத்தம்; காவடி எடுத்து சுரங்கத்திற்குள் செல்ல முயற்சி - மிரண்ட அதிகாரிகள்!

தெய்வ குத்தம்; காவடி எடுத்து சுரங்கத்திற்குள் செல்ல முயற்சி - மிரண்ட அதிகாரிகள்!

பிரதமர் வாழ்த்து

இந்நிலையில், அங்கு மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 இடங்களில் ஒன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இது மாலை 6 மணி வரை நடக்கிறது. இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

pm narendra modi

வாக்களிப்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது.

மக்கள் அதிக அளவில் வாக்களித்து ஒரு புதிய சாதனையை படைக்க வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.