பள்ளி மாடியிலிருந்து குதித்த 4ம் வகுப்பு சிறுமி - துடிதுடித்து உயிரிழப்பு!
பள்ளியின் 4வது மாடியில் இருந்து 9 வயது சிறுமி கீழே விழுந்து உயிரிழந்துள்ளது.
குழந்தை தற்கொலை
ஜெய்ப்பூர், தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த 9 வயது அமய்ரா என்ற சிறுமி, பள்ளியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கீழே சில செடிகள் இருந்த நிலையில், அதில் சிறுமி விழுந்திருக்கிறார். அவரது தலை அங்குள்ள சுவரில் மோதியுள்ளது. குழந்தை சுமார் 47 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளது. தில் குழந்தையின் விலா எலும்புகள் உடைந்து உள் உறுப்புகளைத் தாக்கியதால், உடல் முழுவதும் காற்று நிரம்பி வீங்கியிருந்தது.
தீவிர விசாரணை
தலையில் மிக மோசமான காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கும் இருந்தது. தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும், ரத்தக் கறை உட்பட எந்தவொரு ஆதாரமும் அங்கு இல்லை.
குழந்தை விழுந்த இடத்தில் இருந்த ரத்தக் கறைகளைப் பள்ளி நிர்வாகம் சுத்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது குழந்தையின் பெற்றோர் புகாரளித்த நிலையில், குழந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.