அரசு பேருந்து - லாரி மோதி கோர விபத்து; 17 பேர் பலி
Telangana
Accident
Death
By Sumathi
அரசு பஸ்- லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோர விபத்து
தெலுங்கானா, ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பயணிகள் 70 பேருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

லாரியில் இருந்த கிராவல் மண், பஸ் பயணிகள் மீது கொட்டியது. இதில் பயணிகள் 17 பேர் தப்பிக்க வழியின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
17 பேர் பலி
மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தால் செவெல்லா - விகாராபாத் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தற்போது போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.