வியூஸ் வாங்க இப்படியா..? தண்டவாளத்தில் விபரீத விளையாட்டில் யூடியூபர்..! நேர்ந்த சோகம்!!
தற்போதைய இளம் தலைமுறையினர் பலரும் வெறும் கொஞ்சம் வியூஸ் வாங்க பல அநாகரீகமான வேலைகளுக்கும் ஈடுபட துவங்கி விட்டனர்.
வைரலான வீடியோ
அதில் வரும் சொற்ப வியூஸ் அவர்களின் வாழ்க்கையையே சில நேரங்களில் கேள்விக்குள்ளாகி விடுகின்றது. அப்படி ஒன்று தான் நடந்து சிக்கியுள்ளார் ஒரு யூடியூபர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரபல யூடியூபர் Stupid DTS.
YouTuber bursting crackers on Railway Tracks!!
— Trains of India ?? (@trainwalebhaiya) November 7, 2023
Such acts may lead to serious accidents in form of fire, Please take necessary action against such miscreants.
Location: 227/32 Near Dantra Station on Phulera-Ajmer Section.@NWRailways @rpfnwraii @RpfNwr @DrmAjmer @GMNWRailway pic.twitter.com/mjdNmX9TzQ
இவர் சமீபத்தில் பதிவேற்றிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் இவர், ரயிலின் தண்டவாளத்தில் பல பாம்பு மாத்திரைகளை கொட்டி, பட்டாசுகள் எவ்வாறு மாசினை ஏற்படுத்துகின்றன என்பதை காண்பித்திருந்தார்.
நடவடிக்கை எடுக்கப்படுமா..?
பெரும் வைரலான இந்த வீடியோவை trains of india என்ற X தள பக்கத்தில் பதிவிட்டு, இதுபோன்ற செயல்கள் தீ வடிவில் கடுமையான விபத்துக்களை ஏற்படுத்தக்கூடும். இது போன்ற தவறான நபர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும். என வேண்டுகோள் வைக்கப்பட்டது.
We appreciate your concern. it is to inform that Case No. 716/23 (under section145-147 Indian Railway Act-1989) has been registered at Phulera Post. Thank you for bringing the issue in our notice.
— DRM Jaipur (@DRMJaipur) November 8, 2023
இதற்கு பதிலளித்த DRM ஜெய்ப்பூர், வழக்கு எண். 716/23 (பிரிவு 145-147 இந்திய ரயில்வே சட்டம்-1989 இன் கீழ்) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பதிவிட்டுள்ளது. பலரும் சமூகவலைத்தளங்களில் அவர் குறித்து கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், அவர் விரைவில் கைதாவார் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரான் படைத்தளபதிகளின் இறுதிச் சடங்கு : பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு IBC Tamil
