ரீல்ஸ் மோகமா..? காதலியை சுட்டுக்கொன்ற காதலன்..!! பதறவைக்கும் வீடியோ..!!
தனது காதலியை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
விபரீத செயல்
தென் அமெரிக்காவின் பிரேசிலின் நாட்டில் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயி என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் 27 வயது காதலனால் அவரது 23 வயது காதலி சுட்டுக் கொல்லப்படும்போது வீடியோவை காதலி பதிவு செய்துள்ளார்.
இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கும் அந்த வீடியோவில், வீட்டின் பால்கனியில் நின்றிருக்கும் காதலனை படம்பிடித்து வந்துள்ளார் காதலி. அந்த வீடியோவில், காதலன் கையில் துப்பாக்கி ஒன்றும் வைத்துள்ளான். அந்த தங்க நிற துப்பாக்கியை காதலியை நோக்கி காட்ட காதலி அந்த வீடியோவில், சிரித்துக்கொண்டே இருக்கிறார்.
அவர் சிரித்து கொண்டிருக்கும் போதே சற்றும் எதிர்பாராத விதமாக காதலன் கையில் இருந்த துப்பாக்கியால் காதலியை சுடுகிறார். இதில் படுகாயமடைந்த காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அனைத்தும் உயிரிழந்த காதலி வீடியோவாக பதிவு செய்திருந்த நிலையில், வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றது.
SHOCKING: A 23-year-old woman recorded the moment she was killed after being shot by her 27-year-old boyfriend in Jataí, in the southwestern region of Goiás, Brazil. pic.twitter.com/LoA9PXgyqt
— Insider Corner (@insiderscorner) November 6, 2023
இந்த கொடூர சம்பவத்தின் பின்னர் காதலனே போலீசாருக்கு தகவல் அளிக்க, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்குக்கான தகவல் இன்னும் எதுவும் வெளிவரவில்லை.