மக்களின் முன்பே...லைவ் நிகழ்ச்சியில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல தொகுப்பாளர்..!!
நடைபெற்று வந்த லைவ் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுடப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
பிரபல தொகுப்பாளர்
ஜுவான் ஜுமலோன் என்ற 57 வயதாகும் நபர் பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு FM நிகழ்ச்சியில் பணியாற்றி வருகின்றார். அந்நாட்டு ரசிகர்களுக்கு ஜானி வாக்கர் என்ற பெயரில் பிரபலமாக இருந்து வரும் இவர் தனது வீட்டிலேயே ரேடியோ ஸ்டேஷன் அமைத்து நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார்.
இவர் பிலிப்பைன் நாட்டின் தெற்கு தீவான் மின்டானாவோ என்ற நகரில் அமைந்துள்ள இவரது வீட்டில் இவர் வழக்கம் போல நிகழ்ச்சி நிகழ்த்தி வந்துள்ளார். லைவில் ஜுவான் ஜுமலோன் இருந்த போது அவருடன் பல மக்களும் அங்கிருந்துள்ளனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் அவரது ஸ்டூடியோவிற்குள் புகுந்துள்ளார். சட்டென ஸ்டுடியோவிற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் ஜுவான் ஜுமலோனை நோக்கி சுட்டு உள்ளார்.
சுட்டு கொலை
இந்த எதிர்பாராத சம்பவத்தால் மக்கள் அலற மேடையில் இருந்த தொகுப்பாளர் ஜுவான் ஜுமலோன் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜுவான் ஜுமலோனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து, ஜுவான் ஜுமலோனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்குப் பதிந்தனர். லைவ் நிகழ்ச்சியில் மக்களின் முன்பு பிரபலமான தொகுப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.