Wednesday, Jan 22, 2025

25 லட்சம் மோசடி..!! போன் போட்டு மிரட்டிய பிரபுதேவாவின் தம்பி!! சென்னை தம்பதி புகார்!!

Prabhu Deva
By Karthick a year ago
Report

நடிகர் பிரபுதேவாவின் தம்பியும் நடிகருமான நாகேந்திர பிரசாத் போன் போட்டு மிரட்டுவதாக சென்னை தம்பதிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

என்ன புகார்..?

நடன இயக்குனர் சுந்தரத்தின் மகன்கள் பிரபுதேவா, ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத். மூவரும் திரைத்துறையில் இயங்கி வருகின்றனர். இதில், தற்போது நாகேந்திர பிரசாத் மீது புகார் அளித்துள்ளனர் சென்னையை சேர்ந்த தம்பதிகள்.

அவர்கள் இது குறித்து பேசும் போது, லாக்டவுன் முடிந்து தாங்கள் வீடு தேடி வந்த போது தான், தேனாம்பேட்டையில் ஒரு அபார்ட்மென்ட் வீட்டில் வாடகை போர்டு பார்த்து, அதிலிருந்த நம்பருக்கு தாங்கள் கால் செய்தபோது, அந்த ஓனர், தான் ஒரு செலிபிரட்டி என குறிப்பிட்டு வீட்டை ஒரு கம்பெனிக்கு கொடுத்துள்ளதாகவும், கம்பெனியின் கேர் டேக்கர் தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று தெரிவித்தாக கூறினார்கள்.

prabhudeva-brother-nagendra-prasad-cheats-25-lakhs

அதன் காரணமாக, கம்பெனியிடம் பேசுங்கள் என என அவர் கூற, அவர்களிடம் பேசிய போது, வீட்டின் லீசுக்கு ரூ 25 லட்சம் என்று கூறி, அதனை தாங்கள் கொடுத்தால் அப்பணத்தை கம்பெனிகாரர்கள் ஓனருக்கு வாடகையாக கொடுத்திடுவோம் என்றதாக குறிப்பிட்டனர். 

ஏமாற்றினார் நாகேந்திர பிரசாத் 

அதே நேரத்தில் வீட்டினை காலி செய்யும் போது அந்த 25 லட்ச ரூபாயை திருப்பி தருவதாகவும் அவர்கள் கூறி இருக்கின்றனர். இதனை அடுத்து மீண்டும் போனில் ஓனரிடம் தாங்கள் வாடகையை உங்களிடமே நேரடியாக கொடுத்துவிடுகிறேன் என்று கூறியதாக சொன்ன தம்பதிகள், அப்போது அந்த ஓனர், கம்பெனியிடம் கொடுத்தால் தங்களுக்கு வாடகை அதிகமாக கிடைக்கும் என்றார்.

"இது தான் நம்ப ஸ்டைலு"!! கமலுக்கு குறும்படம் போட்ட பிரதீப்..!

"இது தான் நம்ப ஸ்டைலு"!! கமலுக்கு குறும்படம் போட்ட பிரதீப்..!

இதனையடுத்து தாங்கள் ரூ 25 லட்சத்தை கொடுத்த பிறகு, அந்நிறுவனம் ஓனருக்கு 8 மாதங்களாக வாடகைத் தொகையை கொடுக்காமல் இருந்த நிலையில் தான் அந்த கம்பெனியே இல்லை என்ற அவர்கள், இரு ஆண்டுகள் அக்ரிமென்ட் போட்டதால் தாங்கள் போலீஸில் புகார் அளித்துள்ளோம் என்றனர்.

prabhudeva-brother-nagendra-prasad-cheats-25-lakhs

வீட்டின் ஓனரிடம் பணத்தை குறித்து கேட்ட போது பணத்தை கம்பெனியிடம்தானே கொடுத்தீர்கள். அங்கே கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த கம்பெனி யார் என்றே தங்களுக்கு தெரியாது என குறிப்பிட்ட தம்பதிகள் கம்பெனி மீது நல்ல ரிவ்யூக்கள் இருப்பதால் அங்கேயே பணத்தை கொடுங்கள் என ஓனர் கூறியதாக சொல்லி, தற்போது கம்பெனி செய்த தவறுக்கு தாங்கள் வாடகை கொடுக்கவில்லை என கூறி எங்கள் வீட்டின் பூட்டை திறக்கமுடியாத படி இரும்பு தகடு போட்டு ஓனர் அடித்துவிட்டார்கள் என்று தெரிவித்தனர்.  

இந்த வீட்டின் ஓனர் நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத்தான் என குறிப்பிட்ட தம்பதிகள், அவர்தான் தங்கள் பணத்தை ஏமாற்றினார்கள் என்றும் எங்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்தால் போதும் என கேட்டுக்கொண்டனர். மேலும், வீட்டினை காலி செய்யும் படி தங்களை நாகேந்திர பிரசாத் போனில் மிரட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் இதில், நடிகர் நாகேந்திர பிரசாத்தையும் STSK என்ற அந்த பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளது விசாரணையில் அம்பாலமாகியுள்ளது.