"இது தான் நம்ப ஸ்டைலு"!! கமலுக்கு குறும்படம் போட்ட பிரதீப்..!

Kamal Haasan Bigg Boss Pradeep Anthony
By Karthick Nov 07, 2023 09:00 AM GMT
Report

இன்று நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிக் பாஸ் புகழ் பிரதீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதீப் விவகாரம்

பிக் பாஸ் வீட்டில் இருந்து பெண்களின் பாதுகாப்பை கருதி என்ற காரணத்தை சுட்டிக்காட்டி பிரதீப் வெளியேற்றப்பட்டார். இது பெரும் எதிர்வினைகள் ஏற்படுத்தி வருகின்றது. சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாக பல கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

pradeep-antony-wishes-kamal-with-a-small-video

நடுவரான கமலை பலரும் வசைபாடி வரும் சூழலில், கமலின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதீப் அவருக்கு ஒரு குறும்படத்துடன் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

பிரதீப்பின் குறும்படம்

அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெரிய ரசிகன் சார் சத்தியமா சொல்றேன்...உங்களுக்கு 69வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு உங்கள் கலை மற்றும் பங்களிப்புகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என பதிவிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், வசூல் ராஜா படத்தில் இடம்பெற்றிருந்த காட்சி ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கமல் வேணும் எதுவும் பண்ணல என பேசும் காட்சி இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.