கொள்ளையடித்தே 4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய கும்பல் - அதிர்ந்த போலீஸ்

Crime Virudhunagar
By Karthikraja Jun 21, 2024 06:59 AM GMT
Report

தமிழ்நாடு முழுவதும் கொள்ளையடித்து கோடி கோடியாக சொத்து சேர்த்த கும்பலை காவல் துறை கைது செய்துள்ளது.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்தன. இதையடுத்து போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர். 

rajapalayam

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் முகமூடிகள், உடைகள் இருந்தது. உடனே அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்ததில் கூட்டாளியுடன் சேர்ந்து ராஜபாளையத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 

வங்கி கொள்ளை: ஜோதிடம் பார்த்து நகையை மீட்ட போலீசார் - சுவாரஸ்ய சம்பவம்!

வங்கி கொள்ளை: ஜோதிடம் பார்த்து நகையை மீட்ட போலீசார் - சுவாரஸ்ய சம்பவம்!

மூர்த்தி

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் இந்த கொள்ளைச்சம்பவங்களுக்கு மூளையாக இருந்தது திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரிய வந்தது. இவரது உறவினர்கள் வீடு ராஜபாளையம் அருகே, முறம்பு பகுதியில் உள்ளது.

அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் மூர்த்தி ராஜபாளையம் ஐஎன்டியூசி நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி, தமிழகம் முழுவதும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சிசிடிவி இல்லாத வீடுகளாக பார்த்து கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளைப்பணத்தை தன் உறவினர்கள் மூலம் வங்கியில் முதலீடு செய்துள்ளார்.

சொத்து குவிப்பு

இதன் மூலம் சேர்ந்த பணத்தை வைத்து ராஜபாளையத்தில் ரூ.4 கோடி மதிப்பில் ஒரு நூற்பாலை, ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே ரூ.40 லட்சத்திற்கு இடம், மதுரையில் பல கோடி மதிப்புள்ள அபார்ட்மென்ட், ரூ.12 லட்சத்திற்கு பைக் என வாங்கி குவித்துள்ளார். 

rajapalayam police

முறம்பு கிராமத்துக்கு சென்ற போலீசார், மூர்த்தியின் உறவினர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 98 பவுன் நகை பைக் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.