பிரபாஸுக்கு அதனால் தான் திருமணமாகவில்லை. - போட்டுடைத்த ராஜமௌலி
பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாத காரணம் குறித்து இயக்குனர் ராஜமௌலி பேசியுள்ளார்.
பிரபாஸ்
பான் இந்தியா நடிகராக கலக்கி வருபவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் தமிழில் ஏரளமான ரசிகர்களை பிடித்துவிட்டார். 44 வயதாகி விட்ட நிலையில் பிரபாஸுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பல பேட்டிகளில் பிரபாஸிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு அவர் பதில் எதுவும் அளிக்காமல் சமாளிக்கும் விதமாக ஒரு சிறிய புன்னைகையுடன் அந்த கேள்வியினை கடந்து சென்றுவிடுவார்.
ராஜமௌலி
தற்போது, பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898AD, என்கிற திரைப்படம் ஜூன் 27 ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, பிரபாஸுக்கு சோம்பேறித்தனம் அதிகம், திருமணம் செய்வதிலும் சோம்பேறியாக இருக்கிறார்.
ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து அவரின் பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
செம்மணிப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு : பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை IBC Tamil