மதுர வீரன் பாடலை முதலில் பாடியது ராஜலட்சுமியாம்.. இயக்குநர் மகளால் மறுப்பா?
மதுரை வீரன் பாடலை முதலில் செந்தில் ராஜலட்சுமி பாடிய நிலையில், அவரை நீக்கிவிட்டு இயக்குநர் ஷங்கரின் மகளை பாட வைத்துள்ளது சர்ச்சையாக மாறியுள்ளது.
விருமன்
நடிகர் கார்த்தியை வைத்து தற்போது இயக்குநர் முத்தையா இயக்கி திரையில் வெளிவரப்போகும் படமே விருமன். கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் " கஞ்சா பூவு கண்ணால " என்னும் பாடல் வெளியாகி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனைத்தொடர்ந்து "மதுர வீரன்" என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,
மதுரை வீரன் பாடல்
தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலை நடிகை அதிதி ஷங்கர் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளனர். ஆனால் இந்த பாடலை முதலில் பாடகி ராஜலட்சுமி தான் பாடியுள்ளதாக தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.
இவர் ஏற்கனவே விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலரது கவனத்தையும் பெற்றவர். இந்நிகழ்சிக்கு பிறகு இவர்க்கு பல திரைப்படங்களில் பாட வாய்ப்புக்கிடைத்து வருகிறது.
ராஜலட்சுமி
அதிலும் 'சின்ன மச்சான்' , 'கத்தறி பூவழகி', புஷ்பாவின் 'சாமி', போன்ற பாடல்கள் ஹிட் ஆனது. இந்நிலையில் இவர்க்கு தான் முதலில் விருமன் படத்தில் மதுர வீரன் பாடலை பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் படக்குழுவினர் இவரது குரலை நீக்கிவிட்டு நடிகை அதிதியை பாட வைத்துள்ளனர்.இயக்குனர் மகளை பாட வைக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளனரா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.