தற்கொலை செய்து கொள்வேன்: ராஜலட்சுமி- செந்தில் ஜோடி மீது கிராமிய பாடகி பரபரப்பு புகார்
தன்னுடைய பாடலை திருடி கோவில் விழாக்களில் பாடி வருவதாக கிராமிய பாடகியான மதுர மல்லி, செந்தில்- ராஜலட்சுமி தம்பதியினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில்- ராஜலட்சுமி தம்பதியினர், தொடர்ந்து பல்வேறு கோவில் விழாக்கள், வெளிநாட்டு கச்சேரிகளில் பாடி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் மீது மதுர மல்லி என்றழைக்கப்படும் டாக்டர் கலைச்செல்வி பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, தன்னுடைய பாடலை திருடிய ராஜலட்சுமி- செந்தில் தம்பதியினர் கோவில் விழாக்களில் பாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது என்ற பாடல் தன்னால் இயற்றப்பட்டு யூடியூப்பில் ஹிட் அடித்தது.
இதை தன்னுடைய தங்கையில் பாடல் எனக்கூறி ராஜலட்சுமி பாடி வருகிறார், இது பொய்யான ஒன்று, கீழ்த்தரமானது.
இதற்காக அவர்கள் என்னிடம் மன்னிப்பு கூறவேண்டும், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான நான் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என கண்ணீர்மல்க புகார் அளித்துள்ளார்.
மேலும் இதற்கு ஆதாரமாக இன்றளவும் யூடியூப்பில் ரசிகர்களால் தன்னுடைய பாடல் கேட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.