அடிப்படை அறிவு கூட இல்லை - வெளிநாட்டில் நடுரோட்டில் பாடகி ராஜலக்ஷ்மிக்கு ஏற்பட்ட அவமரியாதை!!
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதி பாட்டு போட்டி நிகழ்ச்சியில் அறிமுகமாகி மெல்ல ரசிகர்களின் கவனத்தை பெற்றனர்.
ராஜலட்சுமி
கிராமப்புற பாடல்களை பாடி மக்களை கவர்ந்தவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. அடுத்தடுத்த படங்களில் பிஸியான இவர்களுக்கு வெளிநாடு நிகழ்ச்சிகளில் பாடவும் வாய்ப்புகள் வர, அனைத்திலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகிறார்கள்.
இடையில் இருவரும் ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்தார்கள். பாடகி ராஜலட்சுமி லைசன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் அண்மையில் அமெரிக்கவிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்.
நிகழ்ச்சிக்காக சென்றவர், அந்நாட்டை சேர்ந்த ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் படியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வீடியோவில் அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.
அடிப்படை அறிவு
அதற்கு பலரும் விமர்சனங்களை வைத்தார்கள். இதற்கு ராஜலக்ஷ்மி பதிலடி கொடுத்துள்ளார். ஆங்கிலத்தை நமக்குள்ளே பேசினால் தவறுகள் தெரியாது அதனால் ஆங்கிலத்தில் பேசி வீடியோ போட்டேன்.
நான் பேசியதை மட்டுமின்றி நான் அணிந்திருந்த ஆடையைக் குறித்தும் மோசமாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி செய்வார்கள். எனக்கு எது சரியாக இருக்கோ அதை நான் போடுகிறேன். எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கடைப்பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.