Tuesday, Apr 29, 2025

வீடியோ காலில் அமெரிக்காவில் மாப்பிள்ளை - திருநெல்வேலியில் பொண்ணு!! நெப்போலியன் மருமகள் இவரே

Napoleon Tamil nadu Marriage
By Karthick 10 months ago
Report

நடிகர் நெப்போலியனின் மகன் திருமண நிச்சயம் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.

நெப்போலியன்

1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் வில்லனாக அசத்தியுள்ளார். 2001ல் திமுகவில் இணைந்த இவர் பெரம்பலூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

actor napolean family

பின், பாஜகவில் இணைந்து அக்கட்சியின் மாநிலத் துறைத் தலைவராக இருந்தார். இதற்கிடையில் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மகன் திருமணம் அதில் மூத்தமகன் தனுஷுக்கு தசை சிதைவு எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரால் நடக்க முடியாது.

திருமண நிச்சயம் 

எனவே, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன் குடும்பத்துடன் அங்கேயே செட்டிலானார். இரண்டாவது மகன் குணால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில் பட்டப்படிப்பை முடித்தார். தனுஷிற்கு தற்போது திருமண நிச்சயம் நடந்து முடிந்துள்ளது.

நெப்போலியன் மகனுக்கு திருமணம்; முதல்வருக்கு நேரில் பத்திரிக்கை - மருமகள் யார் தெரியுமா?

நெப்போலியன் மகனுக்கு திருமணம்; முதல்வருக்கு நேரில் பத்திரிக்கை - மருமகள் யார் தெரியுமா?

நெப்போலியனின் வருங்கால மருமகள் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் என்றும் அவரின் பெயர் அக்ஷயா என்பதும் தெரியவந்துள்ளது.

actor napolean son engagement

வீடியோ காலில் தனுஷ் அமெரிக்காவில் இருந்து கலந்து கொள்ள, இங்கு நிச்சயதார்த்த நிகழ்வில் நெப்போலியன் தம்பதிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.