ரெயின் அலெர்ட்.. அடுத்த 3 மணிநேரத்தில் 34 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் மழை - வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, தேனி என 14 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில்
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று இரவு 7 மணி வரை தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் மழை பெய்யும்.
மேலும், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மடிலாடுதுறை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.