தமிழகத்தில் 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை
தென்மேற்கு வங்கக்கடலின் மேல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளனர். அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 40 பேர் கொண்ட இரண்டு குழுவினர், அதிநவீன உபகரணங்களுடன் விரைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.