6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கொட்டப்போகும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்
தமிழகத்தில் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்கள்
இந்நிலையில், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளனர். மேலும்,நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் 8-ம் தேதி முதல் 10 வரை லேசான மலை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.