இவர் தான் பெஸ்ட் கேப்டன்..தோனி இல்ல!! பாய்ண்ட் சொன்ன ரெய்னா - கடுப்பான சிஎஸ்கே வீரர்கள்!!

MS Dhoni Rohit Sharma Suresh Raina Indian Cricket Team
By Karthick Jun 11, 2024 07:56 AM GMT
Report

பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு பலரும் ரோகித் சர்மாவை பாராட்டி வருகிறார்கள்.

இந்தியா வெற்றி

20 ஓவர்களில் 300 ரன்களை நெருங்கி அடித்து வரும் காலகட்டத்தில் வெறும் 119 ரன்களை வெற்றிக்கரமாக defend செய்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது இந்தியா. அதுவும் எதிரியான பாகிஸ்தான் அணியிடம் இந்தியா இந்த வெற்றியை ருசித்துள்ளது.

இவர் தான் பெஸ்ட் கேப்டன்..தோனி இல்ல!! பாய்ண்ட் சொன்ன ரெய்னா - கடுப்பான சிஎஸ்கே வீரர்கள்!! | Raina Hails Rohit Captainship Csk Fans Hurt Post

இதற்கு முக்கிய காரணம், அணியின் கேப்டன் ரோகித். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 80/4 என இருந்த நிலையில்,பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி உபயோகித்து இந்தியாவை கரை சேரவைத்தார் ரோகித்.

சிறப்பான ஒரு கேப்டன்ஷிப்பிறகு இது எடுத்துக்காட்டு என பலரும் ரோகித்தை பாராட்டி வருகிறார்கள். எப்போதும் சிறப்பான கேப்டன் என்றால், அது நேராக தோனியுடன் தான் ஒப்பிடப்படுகிறது.

ரோகித் தான் பெஸ்ட் கேப்டன்..மும்பை அணியில் அப்படி இல்லை - ரிக்கி பாண்டிங் ஆதங்கம்

ரோகித் தான் பெஸ்ட் கேப்டன்..மும்பை அணியில் அப்படி இல்லை - ரிக்கி பாண்டிங் ஆதங்கம்

அவ்வளவு எண்ணிலடங்கா சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார் தோனி. இந்தியா அணி வெற்றி பெற்றதும் முன்னாள் வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் தான் பெஸ்ட் கேப்டன்..தோனி இல்ல!! பாய்ண்ட் சொன்ன ரெய்னா - கடுப்பான சிஎஸ்கே வீரர்கள்!! | Raina Hails Rohit Captainship Csk Fans Hurt Post

அப்படி, இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவின் பதிவு பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

கடுப்பில் சிஎஸ்கே  

தனது இன்ஸ்டாகிராமில் சுரேஷ் ரெய்னா, வெற்றிக்கு பிறகு ரோகித்தை புகழ்ந்து "Best captain in white ball cricket" என புகழாரம் சூட்டியுள்ளார். இதனை கண்ட சென்னை ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தோனியின் நெருங்கிய நண்பராக இருக்கும் ரெய்னா, இவ்வாறு தோனியை காட்டிலும் ரோகித்தை புகழ்ந்தது அவர்களுக்கு சற்று மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தான் பெஸ்ட் கேப்டன்..தோனி இல்ல!! பாய்ண்ட் சொன்ன ரெய்னா - கடுப்பான சிஎஸ்கே வீரர்கள்!! | Raina Hails Rohit Captainship Csk Fans Hurt Post

தோனி மற்றும் சென்னை அணியின் ரசிகர்களுக்கு தோனி மட்டுமே சிறப்பான கேப்டன். ரெய்னா இப்படி ஸ்டேட்டஸ் வைக்க, தோனியை விட்டுவிட்டு ரோகித்தை ஏன் இப்படி புகழ்ந்தீர்கள் என பேசத்துவங்கிவிட்டார்கள்.