IPL Play off - வாழ்வா சாவா ஆட்டம்? மழை வந்தால் யாருக்கு லாபம்?
வரும் 18-ஆம் தேதி சென்னை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
பெங்களூரு
முதல் 7 போட்டிகளில் 1'இல் மட்டுமே வெற்றி பெற்று கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில் இருந்த பெங்களூரு அணி, அடுத்த 6 போட்டிகளில் 5'இல் வரிசையாக வெற்றி பெற்றுள்ளது. பலருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் வகையில் விளையாடி வரும் பெங்களூரு அணி Playoff வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது.
தற்போது புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு தனது கடைசி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன் சென்னை அணி இதுவரை 13 போட்டிகளில் 7 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
இன்னும் ஒரு ஆட்டம் மிச்சமிருக்கும் நிலையில், சென்னை அதில் வெற்றி பெற்றாலே போதும், மற்ற அணிகளின் நிலை சென்னை அணியை Play off சுற்றிற்கு கொண்டு செல்லும். அதே நேரத்தில், பெங்களூரு அணி play off பெற வெற்றியுடன் சில நிபந்தனைகளும் உள்ளது.
அதாவது பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்து, சென்னை அணி 18 ரன்களில் தோற்கடிக்க வேண்டும். இல்லையென்றால், சென்னை அணி கொடுக்கும் டார்கெட்டை 18.2 ஓவர்களில் சேசிங் செய்திட வேண்டும்.
மழை
இப்படி சூழ்நிலை இருக்கும் போது, மழை பெரும் தலை வலியாக மாறியுள்ளது.
வானிலை அறிக்கையின் படி, மே 18 பெங்களூரில் இரவு 8 மணி மழை பெய்ய 80% வரை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மழை பெய்தால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி Play off சுற்றுக்கு முன்னேறும்.
அதே நேரத்தில், மழை பெய்து ஓவர்கள் குறைக்கப்பட்டால், அது பெங்களூரு அணிக்கு சாதகமாக அமையலாம்.
அப்படியில்லாமல், ஆட்டம் கைவிடப்பட்டால் பெங்களூரு அணி வெளியேறிவிடும். யார் தகுதி பெறுவார்கள் என்பதை தாண்டி, 2 சிறப்பான அணிகள் விளையாடுவதால், போட்டியை காணவே ரசிகர்கள் அதிக எதிர்பார்புகளை கொண்டுள்ளனர்.