துபாய் வெள்ளத்தில் மிதக்க இந்து கோயில் தான் காரணம்..பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!
துபாயில் வரலாறு காணாத மழை பெய்ததற்கு அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோயில் தான் காரணம் என்று பாகிஸ்தானியர் கூறியுள்ளார்.
துபாய் வெள்ளம்
பொதுவாக பாலைவன பகுதிகளில் மழை பொழிவது ஆச்சரியமான ஒன்று. பெரும்பாலும் செயற்கை முறையில் மட்டுமே மழை பொழிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், வளைகுடா நாடுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இதன் காரணமாக, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் வரலாறு காணாத மழை பொழிந்தது. வருடம் முழுவதும் பொழிய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானியர் சர்ச்சை
குறிப்பாக துபாய் நகரமே மழை வெள்ளத்தில் தத்தளித்தது. அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.இதன் காரணமாக விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த சீற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, துபாயில் பெய்த வரலாறு காணாத மழைக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமிநாராயண் கோயில்தான் காரணம் என்று ஒரு பாகிஸ்தானியர் ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக அபுதாபியில் முதல்முறை கட்டப்பட்ட ந்து கோயிலான சுவாமி நாராயண் கோவிலை, கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.