அபுதாபியில் இந்து கோயில்; அடேங்கப்பா.. ஒரே நாளில் இவ்வளவு பேர் தரிசனமா?

Arab Countries Abu Dhabi
By Sumathi Mar 05, 2024 07:44 AM GMT
Report

அபுதாபி இந்து கோயிலில் ஒரு நாளில் 65,000 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

இந்து கோயில் 

அபுதாபியில் பாப்ஸ் (PABS) அமைப்பு சார்பில் இந்து கோயில் ஒன்று கட்டப்பட்டது. ஐக்கிய அரபு அமிரகத்தில் வசிக்கும் இந்துக்களின் முக்கிய வழிபாட்டு தளமாக விளங்கி வருகிறது.

abu dhabi hindu temple

இதனை அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். தொடர்ந்து, இங்கு சுவாமி தரிசனம் செய்ய பொது விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுகிழமையில் காலையில் 40 ஆயிரம் பேர், மாலையில் 25 ஆயிரம் பேர் என ஒரே நாளில் 65 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு சைவ விருந்து கொடுத்த அமீரக அதிபர்..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு சைவ விருந்து கொடுத்த அமீரக அதிபர்..!

65,000 பேர் தரிசனம்

பெரும் கூட்டமாக இருந்த போதிலும், பக்தர்கள் அமைதியாக நீண்ட வரிசையில் காத்திருந்து நிதானமாக சுவாமி தரிசனம் செய்தனர். இதன்படி, ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் இந்தியா மற்றும் மெக்சிகோ, லண்டன் என பல்வேறு நாடுகளை சேர்ந்த பக்தர்களும் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

அபுதாபியில் இந்து கோயில்; அடேங்கப்பா.. ஒரே நாளில் இவ்வளவு பேர் தரிசனமா? | Abu Dhabi Hindu Temple Visitors Increased

தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாட்டுக்கு அனுமதிஅளிக்கப்படுகிறது. மேலும், விடுமுறை நாட்களில் அபுதாபியில் இருந்து கோயில் வரை 203 என்ற புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஐக்கிய அமீரக அரசு தொடங்கியுள்ளது.