சத்தீஸ்கரில் பெய்த கனமழை - திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி!
மழை வெள்ளத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழை வெள்ளம்
திருப்பத்தூர், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(45). கடந்த 15 ஆண்டு காலமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவில் என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.
ஜகல்பூரில் வசித்து வந்த அவர்கள் திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்வதற்காக புறப்பட்டனர்.
4 பேர் பலி
ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38) மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய நான்கு பேரும் சொந்த ஊர் திரும்பும்போது எதிர்பாராத விதமாக சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதில் காரில் பயணித்த நான்கு பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காரில் இருந்த ஓட்டுநர் லாலா யாதுவால் மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பினார்.
தொடர்ந்து மீட்புக்குழுவினர் 18 மணி நேரம் தொடர்ச்சியாக முயற்சி செய்து காரையும் நான்கு உடல்களையும் மீட்டனர்.