செல்பி மோகத்தால் அதிக மரணம் - இந்தியாதான் முதலிடம்!
செல்பி எடுப்பதில் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
செல்பி மோகம்
அமெரிக்காவில் உள்ள தி பார்பர் சட்ட நிறுவனம், கடந்த 2014 முதல் 2025 மே மாதம் வரை செல்பி எடுக்கும் போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் காயங்களை கண்காணித்து ஆய்வு நடத்தியது.
கூகுள் செய்திகளில் வெளியிடப்பட்ட செய்திகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஆய்வுப்படி, உலகளவில் செல்ஃபி தொடர்பான உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களில், இந்தியா 42.1% பங்கைக் கொண்டுள்ளது.
இதில் 271 செல்ஃபி சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. இந்த 271 பேரில், 214 பேர் உயிரிழந்ததாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா முதலிடம்
அமெரிக்காவில் மொத்தம் 45 செல்ஃபி சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 37 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அதேபோல், பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது. அங்கு செல்ஃபி தொடர்பான சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஆஸ்திரேலியா 5வது இடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 15 செல்ஃபி தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
அனைத்து இறப்புகளிலும் பெரும்பாலும் 46 சதவீதம் கூரைகள், பாறைகள் அல்லது உயரமான கட்டமைப்புகளில் இருந்து விழுவதே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.