இங்கயும் வந்துட்டாங்கப்பா.. இனி ரயில் நிலையங்களிலும் ஃபோட்டோ ஷூட் எடுக்கலாமாம் - கட்டணம் தெரியுமா?
ரயில்வே துறைக்குச் சொந்தமான இடங்களில் திருமண ஃபோட்டோ ஷூட் எடுக்க கட்டணம் செலுத்த வேண்டும்.
ஃபோட்டோ ஷூட்
திரைப்பட படப்பிடிப்பு ரயில் நிலையங்களில் நடத்த ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், திருமண போட்டோ ஷூட் போன்ற வணிக நோக்கத்துடன் புகைப்படம் எடுக்கவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாநகரங்களில் நாள் ஒன்றுக்கு 10,000 ரூபாயும், சிறிய நகரங்களில் 5000 ரூபாயும், கிராமப்புறங்களில் 3000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் பெட்டிகளில் படப்பிடிப்பு நடத்த கூடுதலாக ஒரு நாளுக்கு ரூ.1000 முதல் ரூ. 3000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம்?
கல்வித் தேவை,, புரஃபஷனல் கேமரா, தனிப்பட்ட பயன்பாட்டுக்காக படம் எடுத்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் கேமரா அல்லது சிறிய டிஜிட்டல் கேமரா மூலம் படம் எடுக்க எந்த கட்டணமும் இல்லை.

ஊடகவியலாளர்கள், சமூக நோக்கத்திற்காக தன்னார்வ அமைப்பினர் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கவும் கட்டணம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.