ரயிலில் வெள்ளை நிறத்தில் மட்டுமே போர்வை கொடுப்பது ஏன்? இவ்வளவு விஷயம் இருக்கா!
ரயிலில் ஸ்லீப்பர் சீட் புக்கிங்கில் வெள்ளை நிற போர்வை மட்டுமே கொடுப்பது ஏன் தெரியுமா?
ஸ்லீப்பர் சீட்
ரயில்களில் ஸ்லீப்பர் சீட் புக்கிங் செய்து பயணித்தால் பயணிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகள், தலையணை வாங்கிக் கொள்ளலாம்.
மேலும், குளிர்சாதன பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்வே தரப்பிலேயே கம்பளி போர்வை, பெட்ஷீட், தலையணை கொடுக்கப்படும். இதில் குறிப்பாக வெள்ளை நிற விரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது வழக்கம்.
[7OZBCRD
வெள்ளை நிற போர்வை
ஏனென்றால், இந்த துணி வகைகள் அதிக வெப்பநிலைக்கும், கடுமையான சலவை முறைக்கும் தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். எத்தனை முறை சலவை செய்தாலும் கலர் மங்காமல் அப்படியே இருக்கும். எத்தனை முறை சலவை செய்து உலர்த்தினாலும் பளபளப்பான தோற்றத்துடன் இருக்கும்.
அதுமட்டுமின்றி வெவ்வேறு நிற படுக்கை விரிப்புகளை பயன்படுத்தினால் அவற்றை ஒன்றாக சலவை செய்யும்போது அதில் இருக்கும் நிற சாயங்கள் ஒன்றாக கலக்க வாய்ப்புண்டு.
இதனால்தான், இந்திய ரெயில்வே வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்புகளை தேர்வு செய்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.