ரயிலில் இடம் பிடிக்க தள்ளுமுள்ளு - போலீஸ் தாக்கியதில் வெளியே வந்த இளைஞரின் குடல்

Bihar
By Karthikraja Jul 27, 2024 06:30 PM GMT
Report

ரயில்நிலையத்தில் போலீஸ் தாக்கியதில் இளைஞரின் குடல் வெளியே வந்துள்ளது.

ரெயில் நிலையம்

பீகார் சீதாமாரி மாவட்டத்தில் உள்ள பூப்ரி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூலை 25 ம் தேதி மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக முகமது பர்கான் என்ற 25 வயது இளைஞர் வந்துள்ளார். 

pupri railway station

நடைமேடையில் ரயில் வந்து நின்றதும் முன்பதிவில்லாத பெட்டிகளில் சீட் பிடிப்பதற்கு அங்கு கூடிருந்த பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த ரயில்வே போலீசார் தடியடி நடத்தினர். 

நிஜ கஜினி; கொலையானவரின் உடலில் இருந்த பெயர்கள் - டாட்டூ மூலம் சிக்கிய குற்றவாளிகள்

நிஜ கஜினி; கொலையானவரின் உடலில் இருந்த பெயர்கள் - டாட்டூ மூலம் சிக்கிய குற்றவாளிகள்

அறுவை சிகிச்சை

அப்போது அங்கிருந்த முகமது பர்கானை இரண்டு போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த தாக்குதலில் அவரது வயிற்றில் இருந்த குடல் வெளிய வந்துள்ளது. அவருக்கு ஏற்கனவே வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் தையல் பிரிந்து குடல் வெளியே வந்துள்ளது. 

உடனடியாக பர்கான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே எஸ்.பி மற்றும் 2 கான்ஸ்டபிள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பர்கானை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.