நடைமேடை டிக்கெட்டிற்கும் ஜிஎஸ்டியா? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
53-வது ஜிஎஸ்டி மீட்டிங் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது.
ஜிஎஸ்டி மீட்டிங்
ஜூன் 22, 2024 நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முக்கிய நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த அமர்வில் வரி திருத்தங்கள், ஆதார் பயோமெட்ரிக் ஒருங்கிணைப்பு மற்றும் ரயில்வே சேவைகளில் விலக்கு போன்றவற்றை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் சிலவற்றை தற்போது காணலாம், இந்திய அளவில் பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் அங்கீகாரம் வெளிவரப் போகிறது. இது போலியாக செய்யக்கூடிய பலவற்றை எதிர்த்துப் போராட உதவும் என்று தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த முயற்சியானது, போலி விலைப்பட்டியல் போன்ற மோசடியான நடைமுறைகளைத் தடுப்பதன் மூலம் வரி இணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நடைமேடைக்கும்..
இரும்பு, அலுமினியம் என அனைத்து வகை பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டியாக 12% அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கான தனது நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தியது, பொருந்தக்கூடிய வரி விகிதம் குறித்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து நிலுவையில் உள்ளது.
இந்த நடவடிக்கை நாடு முழுவதும் எரிபொருளுக்கு ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கான ஒரு படியாக பார்க்கப்படுகிறது.
பயணிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், பிளாட்பார்ம் டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்தது கவுன்சில்.