டிக்கெட் கட்டணத்தில் 20% சலுகை - ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்!
ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீத சலுகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
20 சதவீத சலுகை
ரயில்வே அமைச்சகம் பண்டிகை கால சலுகையாக ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீத சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 13 முதல் 26ஆம் தேதி வரை ஒரு வழி பயணம் மேற்கொள்பவர்கள், நவம்பர் 17 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை அதே ரயில்களில் திரும்புவதற்கான (Round Trip Package) டிக்கெட்டை முன்பதிவு செய்தால், திரும்புவதற்கான கட்டணத்தில் 20 சதவீத சலுகையை பெற முடியும்.
முன்பதிவு இரு திசைகளிலும் உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். திரும்பும் பயணத்திற்கான அடிப்படைக் கட்டணத்தில் மட்டுமே 20% மொத்த தள்ளுபடிகள் வழங்கப்படும். செல்லும் பயணம் மற்றும் திரும்பும் பயணத்திற்கு ஒரே வகுப்பு, அதே பயணிகளுக்கு மட்டுமே.
ரயில்வே அறிவிப்பு
முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கு கட்டணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது. இந்த திட்டம் ஃப்ளெக்ஸி கட்டணம் (Flexi fare) கொண்ட ரயில்களைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு ரயில்கள் (தேவைக்கேற்ப சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்கள்) உட்பட அனைத்து ரயில்களிலும் அனுமதிக்கப்படும்.
எந்தவொரு பயணத்திலும் இந்த பயணச் சீட்டுகளில் தேதி உள்ளிட்ட எந்த மாற்றமும் அனுமதிக்கப்படாது. பயணச் சீட்டுகளையும், திரும்பும் பயணச் சீட்டுகளையும் ஒரே தடவையில் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.