புதிய கணக்கு தொடங்குறீங்களா? வங்கி கொடுத்த அதிர்ச்சி!
புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸை பராமரிக்க வேண்டும். வங்கிகள் அந்தக் கணக்கின் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு இந்த மினிமம் பேலன்ஸை பயன்படுத்தும்.
இந்த மினிமம் பேலன்ஸை வைத்திருக்க முடியாத சூழலில், அந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதிக்கும்.
அந்த வகையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை (Average minimum balance) நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50 ஆயிரமாக ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது.
புதிய விதி
சிறு நகரங்களுக்கு ரூ.25,000 ஆகவும், கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய முறையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ.500, இதில் எது குறைவாக இருக்கிறதோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும்.
உள்நாட்டு வங்கிகளில், ஐசிஐசிஐ தான் மிக உயர்ந்த குறைந்தபட்ச இருப்புத் தேவையை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.