கிடைத்த ரகசிய தகவல்..ரயிலில் நடந்த சோதனை - கொத்தாக சிக்கிய 400 போலீசார்!
ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த காவல்துறையினர் 400 பேருக்கு ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து வெளியூர் செல்லும் ஏராளமான ரயில்களில் தினமும் காவல்துறையினர் பயணித்து வருகின்றனர்.
அவ்வாறு செல்லும் காவல்துறையினர் டிக்கெட்டுகளை எடுக்காமல் குளிர்சாதன வகுப்பு மற்றும் முன்பதிவு செய்த படுக்கைகளில் ஏறிக் கொண்டு பயணிகளைத் தொந்தரவு செய்வதாகத் தொடர்ந்து புகார்கள் ரயில்வே நிர்வாகத்துக்கு வந்த வண்ணம் இருந்தது.
அதிலும் குறிப்பாக பிரக்யாராஜ் ரயில் நிலையத்தில் இது தொடர்பான புகார்கள் அதிகம் குவிந்ததாதல் அங்கு ஆய்வு நடத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக காசியாபாத் மற்றும் கான்பூர் இடையே செல்லும் ரயில்களில் சோதனையில் நடத்தினர்.
சிக்கிய காவல்துறையினர்
சுமார் ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் காவல்துறையினர் 400 பேர் சிக்கினர். அதில் டிக்கெட் இன்றி பயணித்தது, முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிகளுக்குத் தொந்தரவு கொடுத்தது உள்ளிட்ட வகைகளில் சிக்கிய அவர்களுக்கு ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் காவல்துறையினர்செல்வது, முன்பதிவு பயணிகளுக்கு மட்டும் இடைஞ்சல் இல்லை. ரயில்வேக்கும் பெரும் இழப்பு.அதனால் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுப்பட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இன்னும் சில நாள்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் எங்களின் சோதனை கடுமையாக இருக்கும் என தெரிவித்தனர்.