மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த ரெயில்வே ஊழியர் - பதைபதைக்கும் சம்பவம்

India Crime Madhya Pradesh
By Karthikraja Jun 05, 2024 09:56 AM GMT
Report

மத்திய பிரதேசத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். +

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டதில் உள்ள சிஹோடா கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான நரேந்திர சதார். ரெயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி ரீனா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது. 

 மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த ரெயில்வே ஊழியர் - பதைபதைக்கும் சம்பவம் | Railway Employee Sucide Infront Of Train

இந்த நிலையில் நரேந்திர சதார், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த 4 பேரின் உடல்களும் சிஹோடா கிராமத்தில் உள்ள பெடாகட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ரெயில் தண்டவாளம் அருகே இன்று காலை கண்டெடுக்கப்பட்டன. அதே இடத்தில் நரேந்திர சதாரின் இருசக்கர வாகனமும் நின்றுள்ளது.

ரயில் முன் பாய்ந்து 5 பெண்கள் தற்கொலை - தமிழகத்தில் பதறவைக்கும் சம்பவம்!

ரயில் முன் பாய்ந்து 5 பெண்கள் தற்கொலை - தமிழகத்தில் பதறவைக்கும் சம்பவம்!

போலீஸ் விசாரணை

இதையடுத்து, 4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி உயிரிழந்த ரீனாவின் தந்தை கூறுகையில், தனது மகள் ரீனா நேற்று தன்னை தொலைபேசியில் அழைத்து அவருக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தார், இதனை நான் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.