11 வயது பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே அதிகாரி - அடித்தே கொன்ற பயணிகள்!
11 வயது சிறுமியை ரயில்வே ஊழியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி
பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், டெல்லிக்குச் செல்லும் ரயிலில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பீகாரிலிருந்து டெல்லிக்கு ஹம்சஃபர் விரைவு ரயிலில் சிவானைச் சேர்ந்த ஒரு குடும்பம் பயணம் செய்தது. இரவு 11.30 மணியளவில், குரூப் டி ரயில்வே ஊழியர் பிரசாந்த் குமார், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை தனது இருக்கையில் உட்கார வைத்தார்.
பின்னர் அந்த சிறுமி கழிவறை சென்றபோது பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கழிவறையிலிருந்து அழுதபடி ஓடி வந்த சிறுமி நடந்ததை அனைத்தும் தனது தாயிடம் சொல்லியுள்ளார்.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் தனது கணவர், மாமனார் மற்றும் பிற பயணிகளிடம் தாய் இதுகுறித்து கூறி இருக்கிறார்.
11 வயது சிறுமி
கோபமடைந்த பயணிகள் மற்றும் குடும்பத்தினர் ரயில் ஊழியர் குமாரை பிடித்து ரயில் கான்பூர் சென்ட்ரல் அடையும் வரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல்துறை அதிகாரிகள் குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் இந்த சமத்துவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.