செபி தலைவரின் விளக்கம்; மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஹிண்டன்பர்க் - ராகுல் கொந்தளிப்பு!

Rahul Gandhi United States of America Gautam Adani
By Sumathi Aug 12, 2024 05:33 AM GMT
Report

செபி தலைவரின் அறிக்கை பல முக்கியமான கேள்விகளை எழுப்புவதாக ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க். இது பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது.

adani - madhabi

இதனைத் தொடர்ந்து அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதானி குழும முறைகேடு தொடர்பாக 'செபி' யே விசாரிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.

ஹிண்டன்பர்க்கிற்கு 1000 கோடி லாபம்; வருங்காலத்தில் இந்தியா மீது தாக்குதல் - அண்ணாமலை பரபரப்பு

ஹிண்டன்பர்க்கிற்கு 1000 கோடி லாபம்; வருங்காலத்தில் இந்தியா மீது தாக்குதல் - அண்ணாமலை பரபரப்பு

ராகுல் கேள்வி

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் உடையவை' என, செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்து உள்ளது. தற்போது, இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி வெளியிட்ட வீடியோவில், செபி தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?

rahul gandhi

முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா? செபி தலைவரா? அல்லது இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்குமா? பார்லி கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது.

சில்லறை முதலீட்டாளர்களின் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்ட செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கேள்விக்கு ஆளாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.